/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'43 சதவீத பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழகம்'
/
'43 சதவீத பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழகம்'
'43 சதவீத பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழகம்'
'43 சதவீத பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழகம்'
ADDED : பிப் 07, 2025 04:12 AM
தலைவாசல்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை, மணி-விழுந்தான், சிறுவாச்சூர், நத்தக்கரை, காமக்காபாளையம் கிரா-மங்களில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நேற்று நடந்தது. சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேசுகையில், ''அரசு திட்டங்கள் அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும்படி, மக்கள் பிரச்னைகளை தேடிச்சென்று தீர்வு காணப்படுகிறது. போட்டி தேர்வுகளில், 90 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்-ளனர். இந்திய அளவில், 43 சதவீத பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலமாக தமிழகம் உள்ளது,'' என்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ''சேலம் மாவட்டத்தில் நடந்த முகாம்களில், 98,000 மனுக்கள் பெறப்-பட்டு, தீர்வு காணும் பணி நடக்கிறது. மக்களுக்கான ஆட்சியை, முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்,'' என்றார். தொடர்ந்து, 10.30 லட்சம் ரூபாய் மதிப்பில், 110 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவலிங்கம், சின்னதுரை, குணசேகரன், சேலம் டி.ஆர்.ஓ., ரவிக்-குமார், தலைவாசல் தாசில்தார் பாலாஜி உள்பட பலர் பங்கேற்-றனர்.

