/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., நடத்திய மாநில கபடி தமிழக போலீஸ் அணி முதலிடம்
/
தி.மு.க., நடத்திய மாநில கபடி தமிழக போலீஸ் அணி முதலிடம்
தி.மு.க., நடத்திய மாநில கபடி தமிழக போலீஸ் அணி முதலிடம்
தி.மு.க., நடத்திய மாநில கபடி தமிழக போலீஸ் அணி முதலிடம்
ADDED : டிச 01, 2024 01:12 AM
தி.மு.க., நடத்திய மாநில கபடி
தமிழக போலீஸ் அணி முதலிடம்
ஓமலுார், டிச. 1--
தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, தி.மு.க.,வின், ஓமலுார் கிழக்கு ஒன்றியம், பேரூர் சார்பில், மாநில கபடி போட்டி, கடந்த நவ., 27ல் தொடங்கியது.
சென்னை, திருச்சி, சேலம், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 32 அணிகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் இறுதிப்போட்டி நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். அதில் தமிழக போலீஸ் அணி, 34 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.
திருவாரூர் கட்டக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 24 புள்ளிகள் பெற்று, 2ம் இடத்தை பிடித்தது. அந்த அணிகளுக்கு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் பரிசு வழங்கினார். இதில் ஓமலுார் கிழக்கு ஒன்றிய செயலர் ரமேஷ், நகர செயலர் ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் சண்முகம், அழகிரி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

