/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டேங்க் ஆப்பரேட்டர் 'போக்சோ'வில் சிக்கினார்
/
டேங்க் ஆப்பரேட்டர் 'போக்சோ'வில் சிக்கினார்
ADDED : ஜூன் 28, 2025 04:00 AM
ஓமலுார்: ஓமலுார் அருகே உள்ள அரசு துவக்கப்பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும், 9 வயது சிறுமி, நேற்று முன்தினம் காலை உணவு சாப்-பிட பள்ளிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒருவர், சிறு-மியை, பள்ளி கட்டடத்துக்கு பின்புறம் அழைத்துச்சென்று சில்-மிஷம்
செய்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, மறுநாள் பள்ளிக்கு செல்ல-வில்லை. சிறுமி தகவல்படி, பெற்றோர், ஓமலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணையில், ஓமலுார் அருகே பாகல்பட்டி, பூமிநா-யக்கன்பட்டியை சேர்ந்த, தற்காலிக டேங்க் ஆப்பரேட்டரான பழனி, 55, சில்மிஷம் செய்தது தெரிந்தது. அவர் மீது 'போக்சோ' வழக்குப்பதிந்த போலீசார், நேற்று கைது செய்தனர். அவர், இரண்டாவது மனைவி, மகனுடன் வசிப்பது விசாரணையில் தெரிந்தது.