/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டாஸ்மாக் சுமை துாக்கும் பணியாளர்கள் தீபாவளி போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்

ADDED : அக் 15, 2024 07:04 AM
பனமரத்துப்பட்டி: சந்தியூரில், டாஸ்மாக் கிடங்கு சுமை துாக்கும் தொழிலாளர்கள், தீபாவளி போனஸ் கேட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். தமிழகத்தில், 43 டாஸ்மாக் கிடங்குகளில் மது பாட்டில்களை ஏற்றி, இறக்கும் பணியில், 2,500 சுமைப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளோம்.மது பாட்டில் இறக்கி, ஏற்றும் ஒப்பந்ததாரர்கள், தீபாவளிக்கு, 500, 1,000 ரூபாய் கொடுக்கின்றனர். தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சுமைப்பணியாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்கவும், பி.எப்.,-- இ.எஸ்.ஐ., ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க செயலர் தேவராஜ், பொருளாளர் கருப்பண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.