டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 14, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி:சந்தியூர்
டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன், டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி
தொழிலாளர்கள், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒருங்கிணைப்பு குழு
மண்டல தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாநில சுமைப்பணி
தொழிலாளர் சங்க செயலர் வேங்கடபதி பேசினார்.
அதில், மது பெட்டிகளை
கடைகளுக்கு அனுப்ப ஏற்றுக்கூலி தலா, 5 ரூபாய் என்பதை டெண்டர்
விதிகளில் குறிப்பிடுதல்; சட்டப்படி ஆண்டு போனஸ் தீபாவளிக்கு, 10
நாட்களுக்கு முன் வழங்குதல்; குடோன்களில் குடிநீர், கழிப்பறை,
ஓய்வறை ஏற்படுத்தல்; 'லோடு பாயின்ட் மேற்கூரை, தரைத்தளம், டிராலி,
பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் என்பன உள்பட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தினர். மண்டல செயலர் வெற்றிவேல், பொருளாளர்
சிவகுமார் உள்ளிட்ட சுமை பணியாளர்கள் பங்கேற்றனர்.
