ADDED : நவ 05, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலையில், ஆற்றல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில், ஒரு வாரம் நடைபெறும் பசுமை தொழில்நுட்பம் என்ற தலைப்பில், ஆசிரியர்களுக்கு திறன் மேம்-பாடு பயிற்சி நேற்று துவங்கியது.
துறை தலைவர் ரமேஷ்குமார் தலைமையில், பல்கலை துணை-வேந்தர் ஜெகநாதன் பயிற்சியை துவக்கி வைத்து, 'ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பம், குறிப்பாக பேட்டரிகளின் முக்கியத்-துவம் குறித்து' பேசினார். பிலாஸ்பூர், குரு காசிதாஸ் விஷ்வவித்-யாலயா இயந்திரவியல் துறை பேராசிரியர் அர்ச்சுன், பசுமை தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கதக்க ஆற்றல் என்ற தலைப்பில் பேசினார்.
உதவி பேராசிரியர் மாதேஸ்வரன், துறை மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

