/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தலைமை ஆசிரியர் பணியிடம் காலி போராட ஆசிரியர் கூட்டணி முடிவு
/
தலைமை ஆசிரியர் பணியிடம் காலி போராட ஆசிரியர் கூட்டணி முடிவு
தலைமை ஆசிரியர் பணியிடம் காலி போராட ஆசிரியர் கூட்டணி முடிவு
தலைமை ஆசிரியர் பணியிடம் காலி போராட ஆசிரியர் கூட்டணி முடிவு
ADDED : அக் 10, 2025 03:31 AM
மேட்டூர்,
சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சி துாக்கனாம்பட்டி, தங்கமாபுரிபட்டணம் அரசு துவக்கப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால், அவற்றை நிரப்ப காத்திருப்பு போராட்டம் நடத்த ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கொளத்துார் வட்டார கிளை செயலாளர் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை:
சேலம் மாவட்டம், தாரமங்கலம் கல்வி மாவட்டம், கொளத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டூர் நகராட்சி துாக்கனாம்பட்டி, தங்கமாபுரிபட்டணத்தில் அரசு துவக்கப்பள்ளிகள் உள்ளன.
இதில், துாக்கனாம்பட்டி பள்ளியில், 2 இடை நிலை ஆசிரியர்கள், 70 மாணவர்கள், தங்கமாபுரிபட்டணம் பள்ளியில், 2 இடைநிலை ஆசிரியர்கள், 26 மாணவர்கள் உள்ளனர்.
கடந்த, 2004ம் ஆண்டுக்கு முன்பு இரு பள்ளிகளும் நடுநிலைப்பள்ளிகளாக இருந்தன. பின்பு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், துவக்கப்பள்ளிகளாக தரம் குறைக்கப்பட்டது.
கடந்த, 2004 முதல் இரு துவக்கப்பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. அப்பள்ளிகளில் பணிபுரியும், 2 இடைநிலை ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர் பணியை சுழற்சி முறையில், கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர். இரு பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியை நியமிக்ககோரி கல்வித்துறை அலுவலர்கள், தொடக்கக் கல்வி இயக்குனருக்கு கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடத்தை விரைவில் நிரப்ப வேண்டும். தாமதிக்கும் பட்சத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில, மாவட்ட பொறுப்பாளர்களை கொண்டு, விரைவில் கொளத்துார் வட்டார கல்வி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.