/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கலந்தாய்வில் முறைகேட்டை தடுக்க ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
/
கலந்தாய்வில் முறைகேட்டை தடுக்க ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
கலந்தாய்வில் முறைகேட்டை தடுக்க ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
கலந்தாய்வில் முறைகேட்டை தடுக்க ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 04, 2025 01:51 AM
சேலம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
அதில், சங்கத்தின் சேலம் கல்வி மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் பேசியதாவது:
தொடக்க கல்வித்துறையில், 2025 - 26ம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வு என அறிவித்துவிட்டு அனைத்து மாவட்டங்களிலும், 'நிர்வாக மாறுதல்' பெயரில், இடமாறுதல் ஆணைகளை, தொடக்க கல்வி அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். விதிகளுக்கு புறம்பாக வழங்கப்பட்ட மாறுதல் ஆணைகளை ரத்து செய்து விட்டு, முறையாக கலந்தாய்வு நடத்தி மாறுதல் ஆணைகளை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட செயலர் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் நல்லம்மாள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.