ADDED : அக் 31, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: திருநெல்வேலி, கோவில்பட்டியை சேர்ந்தவர் அழகேசன், 35. நெல் அறுவடை இயந்திர உரிமையாளரான இவர், சில நாட்களுக்கு முன், அறுவடை இயந்திரத்தை பழுதுபார்க்க, ஆத்துார், மஞ்சினிக்கு வந்தார். நேற்று மாலை, 4:00 மணிக்கு மஞ்சினி பஸ் ஸ்டாப்புக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆத்துாரில் இருந்து, வீரகனுார் நோக்கி சென்ற, 'ஈகோ' கார், அழகேசன் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார், காரை ஓட்டி வந்த, தலைவாசல், இலுப்பநத்தத்தை சேர்ந்த செல்வராஜ், 50, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.