ADDED : ஆக 12, 2024 06:28 AM
அ நிறம் | அளவு
சங்ககிரி: சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடக்க உள்ளது.
ஆனால் கோவில் எதிரே உள்ள குளத்தில் தேவையற்ற செடிகள், கருவேல மரங்களால், தண்ணீர் எடுக்க முடியாத நிலை உள்ளது.இதனால் தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை, பசுமை சங்ககிரி அமைப்பினர் இணைந்து, குளத்தில் இருந்த செடிகள், கருவேல மரங்களை நேற்று அகற்றினர். அங்கிருந்த குப்பையையும் அகற்றினர். இப்பணியில் அறக்கட்டளை நிர்வாகிகள், அமைப்பின் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
