/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவியிடம் சீண்டல் தற்காலிக ஆசிரியர் கைது
/
மாணவியிடம் சீண்டல் தற்காலிக ஆசிரியர் கைது
ADDED : பிப் 07, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஈரோடு, கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 49. சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே குப்பூரில் உள்ள அரசு மாதி-ரிப்பள்ளியில், தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார். கடந்த, 2ல் பள்ளி மாணவ, மாணவியுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, ஒரு சிறுமியிடம் பாலியல் சீண்-டலில், சிவக்குமார் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தெரிவித்-ததை அடுத்து, தலைமையாசிரியர் பாலமுருகன், நேற்று முன்-தினம், ஓமலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், 'போக்சோ' வழக்குப்பதிந்து, நேற்று சிவக்-குமாரை கைது செய்தனர்.