/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தர்கா - கோவில் இடையே சுவர் கட்ட முயற்சியால் பதற்றம்
/
தர்கா - கோவில் இடையே சுவர் கட்ட முயற்சியால் பதற்றம்
தர்கா - கோவில் இடையே சுவர் கட்ட முயற்சியால் பதற்றம்
தர்கா - கோவில் இடையே சுவர் கட்ட முயற்சியால் பதற்றம்
ADDED : டிச 17, 2025 07:41 AM
இடைப்பாடி: இடைப்பாடி நகராட்சி ஆவணியூர் கோட்டையில் தர்கா, அதன் அருகே, மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த இரண்டுக்கும் இடையே, 30 சென்ட் அரசு நிலம் உள்ளது. அரசு நிலத்தில் பாதி நிலத்தை மாரியம்மன் கோவில் நிர்வாகம், மீதி நிலத்தை தர்கா நிர்வாகத்தினர் பயன்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று தர்கா நிர்வாகத்தினர், அங்கு சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகு-தியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றம் உருவானது. அப்போது, 'அந்த இடம் எங்களுக்கு சொந்தம்' என, அப்பகுதி முஸ்லிம்கள் தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.
இதை அறிந்து அங்கு வந்த, இடைப்பாடி தாசில்தார் வைத்தி-லிங்கம் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், பேச்சு நடத்தி, வரும், 20ல் அளவீடு செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து அனை-வரும் கலைந்து சென்றனர்.