தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'ஜவுளி பூங்கா கட்டமைப்பு பணி விரைவில் தொடங்க நடவடிக்கை'

'ஜவுளி பூங்கா கட்டமைப்பு பணி விரைவில் தொடங்க நடவடிக்கை'

'ஜவுளி பூங்கா கட்டமைப்பு பணி விரைவில் தொடங்க நடவடிக்கை'


ADDED : டிச 23, 2024 10:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2024 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், ஜாகீர் அம்மாபாளையம், 'சிப்காட்' பகுதியில், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க, 120 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை, அமைச்சர் ராஜா, நேற்று பார்வையிட்டார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதன் மூலம், சேலம் மண்டலத்தில், 10,000 பேர் நேரடியாகவும், 30,000 முதல், 40,000 பேர் வரை மறைமுகமாகவும் பயனடைய வாய்ப்புள்ளது. ஜவுளி பூங்கா கட்டமைப்பு பணிகளை விரைவில் தொடங்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம், அரியாகவுண்டம்பட்டியில், 1.20 ஏக்கரில், 25.29 கோடி ரூபாய் மதிப்பில் கொலுசு உற்பத்திக்கு பன்மாடி மைய கட்டடம், ஒரு தளத்துக்கு, 34 கடைகள் வீதம், 3 தளங்களில், 102 கடைகளுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, சேலம் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக, விமான நிலைய அலுவலர்கள், வருவாய்த்துறையினரிடம் விபரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, பயன்பாட்டில் உள்ள மினி டைடல் பூங்காவை பார்வையிட்டார். சிப்காட் மேலாண் இயக்குனர் செந்தில்ராஜா, கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் விமான நிலைய இயக்குனர் வைதேகிநாதன், எம்.எல்.ஏ., அருள் உள்பட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us