/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழைநீரை வெளியேற்ற முடியாமல் சேறும் சகதியுமாக மாறிய தலைவாசல் தினசரி மார்க்கெட்

ADDED : நவ 23, 2025 01:11 AM
தலைவாசல், சாரல் மழையில், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியுள்ளதால், விவசாயிகள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், தலைவாசலில், தமிழகத்தின் இரண்டாவது பெரிய தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், கடலுார் பகுதிகளில் சாகுபடி செய்த காய்கறிகளை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில வியாபாரிகள், காய்கறி வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த, சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, மார்க்கெட் வளாகம், வழிப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கியும், சேறும் சகதியுமாக காணப்படுகிறது. மழைநீரை வெளியேற்ற வழியில்லாததால், காய்கறிகள் எடுத்து வரவும், வாங்கிச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காய்கறிகள் வாங்க வரும் மக்கள், நடந்து கூட செல்ல முடியாமல் சேற்றில் செல்லும் பரிதாப நிலை உள்ளது.
தவிர, பெண்களுக்கு கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாததால், சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மழைநீர் வடிகால் அமைக்கவும், சேறும், சகதியுமாக உள்ள பகுதியை சரிசெய்து, குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.