ADDED : மார் 05, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காடு, முருகன் நகரில் கருமாரியம்மன் கோவில் பூசாரி கந்தசாமி, நேற்று காலை, 9:00 மணிக்கு கோவிலுக்கு சென்றார். கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்ததில், கருவறையில் உள்ள இரு சுவாமி சிலைகளில் இருந்த, 1 சவரன் எடையிலான, இரண்டு தாலிகள், உண்டியல் திருடப்பட்டிருந்தன. ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
