/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தியாகராஜர் - வேங்கடரமண சுவாமிகள் 89ம் ஆண்டு ஆராதனை விழா நிறைவு
/
தியாகராஜர் - வேங்கடரமண சுவாமிகள் 89ம் ஆண்டு ஆராதனை விழா நிறைவு
தியாகராஜர் - வேங்கடரமண சுவாமிகள் 89ம் ஆண்டு ஆராதனை விழா நிறைவு
தியாகராஜர் - வேங்கடரமண சுவாமிகள் 89ம் ஆண்டு ஆராதனை விழா நிறைவு
ADDED : மார் 24, 2025 06:59 AM
சேலம்: சேலம் தியாகராஜர் - வேங்கடரமண பாகவதர் மகோத்சவ சபை சார்பில், அதன் சுவாமிகளின், 89ம் ஆண்டு ஆராதனை விழா, பட்டைக்கோவில் அருகே கடந்த, 19ல் பல்வேறு இசைக்கலைஞர்களின் பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன் தொடங்கியது.
தினமும் மாலை, கர்நாடக இசை கச்சேரிகள் நடந்தன. நிறைவு நாளான நேற்று மாலை, 4:00 மணிக்கு மதுரை சியாமளவல்லி, சென்னை அம்ருதா குழுவினரின், சவுராஷ்டிரா மொழியில் சங்கீத ராமாயண இசை நாடகம் நடந்தது. தொடர்ந்து சேலம் பிரஜிதா முரளி குழுவினரின் இசை கச்சேரி, சேலம் கிருஷ்ண பிருந்தாவன கோலாட்ட கலைக்குழுவை சேர்ந்த ஆண், பெண்களின் பாரம்பரிய கோலாட்டம், கும்மியாட்டாம், கோணங்கி நடனங்கள் நடந்தன. இரவு, ஆஞ்சநேயர் விடையாற்றி உற்சவத்துன் தியாகராஜ ஆராதனை விழா நிறைவு பெற்றது.