ADDED : மார் 04, 2024 11:35 AM
சேலம்: மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன், சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில், தி.மு.க., தலைமையில் கூட்டணி வலுவாக உள்ளதால் கடந்த இரு தேர்தலை விட, இம்முறை கூடுதல் வெற்றி கிடைக்கும்.
சிவில் நீதிபதி தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு அதிகாரிகளே காரணம். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இதே நிலை பின்பற்றப்படுகிறது. இத்தகைய தவறுகள், எதிர் காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை தேவை. போதை பொருட்கள் கடத்தலில், எந்த கட்சியினர் ஈடுபட்டாலும் கைது செய்யப்பட வேண்டும். அதன் புழக்கத்தை தடுக்க, அறிக்கை மட்டும் போதாது. போர்க்கால நடவடிக்கை தேவை.
தென் மாவட்டங்களில், தி.மு.க., வெற்றி பெறாது என, அண்ணாமலை கூறுவது பகல் கனவு. தமிழகத்தில் பா.ஜ., வெற்றி பெறுவது கூட பகல் கனவு தான். லோக்சபா தேர்தலில், மா.கம்யூ., 2 இடங்களில் போட்டியிட்டாலும், 40 தொகுதிகளும் எங்கள் தொகுதி தான். 40 பேரும், எங்கள் வேட்பாளர் என கருதி தேர்தல் பணியாற்றுவோம். 'டிபாசிட்' கூட கிடைக்காமல், பா.ஜ.,வை வீழ்த்துவதே எங்களின் ஒரே நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

