/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
25 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
/
25 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
ADDED : செப் 19, 2024 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே நேரு நகரை சேர்ந்தவர் ராஜா, 59. ஆட்டோ மூலம் காய்கறி ஏற்றி, ஓட்டல்களுக்கு வினியோகித்து வந்தார்.
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, ஓமலுார் மார்க்கெட்டில் காய்கறி ஏற்றிக்கொண்டு கருப்பூர் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பஸ், ஆட்டோ பின்புறம் மோதியது. அதில், 25 அடி பள்ளத்தில் ஆட்டோ விழுந்து விபத்துக்குள்ளானது. கருப்பூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ராஜாவை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் மருத்துவர்கள்
பரிசோதனையில், அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

