ADDED : அக் 30, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: நாடு முழுதும் நாளை தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனால் எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டு தீக்காயம் உண்டானால் உடனடி சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, 20 படுக்கை வசதிகள் கொண்ட தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு தனியே செயல்படுகிறது.
பிளாஸ்டிக் சர்ஜரி, அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், 24 மணி நேரம் பணியில் தயாராக இருப்பர் என, டீன் தேவிமீனாள் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர், சிறப்பு சிகிச்சை பிரிவை பார்வையிட்டார்.

