/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'எம்.எல்.ஏ., கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றாத முதல்வர்'
/
'எம்.எல்.ஏ., கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றாத முதல்வர்'
'எம்.எல்.ஏ., கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றாத முதல்வர்'
'எம்.எல்.ஏ., கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றாத முதல்வர்'
ADDED : ஜன 27, 2025 03:09 AM
பனமரத்துப்பட்டி: அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்-கூட்டம், மல்லுாரில் நேற்று முன்தினம் நடந்தது. மாணவரணி செயலர் தமிழ்மணி தலைமை வகித்தார்.
அதில் வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து பேசுகையில், ''ஒவ்-வெரு எம்.எல்.ஏ.,க்களிடம், தொகுதியில் தீர்க்க முடியாத, 10 கோரிக்கைகளை முதல்வர் கேட்டார். கோரிக்கையை கொடுத்தோம். எதுவும் நிறைவேற்றவில்லை. ஆனால் அனைத்து வரிகள், அத்யாவசிய பொருட்களின் விலையை உயர்த்திவிட்-டனர். அதனால், 2026ல், இ.பி.ஸ்., ஆட்சியில் அமர வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் பரமசிவம், தி.மு.க., அரசின் செயல்பாடுகள் குறித்து பேசினர். இதில், எம்.எல்.ஏ.,க்களான, ஓமலுார் மணி, ஆத்துார் ஜெயசங்கரன், ஏற்-காடு சித்ரா, பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலர்களான, மேற்கு ஜெகநாதன், கிழக்கு பாலச்சந்திரன், மல்லுார் அம்மா பேரவை செயலர் பழனிவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.