/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாயுடன் சென்ற குழந்தைகள் லாரி மோதியதில் சிறுமி பலி
/
தாயுடன் சென்ற குழந்தைகள் லாரி மோதியதில் சிறுமி பலி
தாயுடன் சென்ற குழந்தைகள் லாரி மோதியதில் சிறுமி பலி
தாயுடன் சென்ற குழந்தைகள் லாரி மோதியதில் சிறுமி பலி
ADDED : செப் 27, 2024 02:28 AM
ஓமலுார்:சேலம் மாவட்டம், ஓமலுார், பொட்டியபுரம் ஊராட்சி கட்டிக்காரனுார் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக், 40, சென்னையில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி, 35. இவர்கள் மகள்கள் யமுனா, 11, ஷிவானி, 9, அனு, 7. இவர்கள் முறையே, 6, 4, 2ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று காலை, 8:30 மணிக்கு ராஜேஸ்வரி, 'டியோ' மொபட்டில், மூன்று குழந்தைகளையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். யமுனாவை பள்ளியில் விட்டவர், மற்ற இரு குழந்தைகளுடன், கடை வீதியில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரி, மொபட் பின்புறம் மோதி, அதை இழுத்துச் சென்றது.
இதில், அனு, லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். ஷிவானிக்கு கால் முறிவும், ராஜேஸ்வரிக்கு பலத்த காயமும் ஏற்பட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஓமலுார் போலீசார் விசாரணையில், லாரி டிரைவர், ராஜஸ்தானை சேர்ந்த நுார்முகமது, 47, என தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.
தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, ஓமலுார் நகர் நுழைவிடத்தில் போலீஸ் சார்பில், காலை, 7:00 - 10:00; மாலை, 4:00 - 10:00 மணி வரை, கனரக வாகனங்கள் உள்ளே வரக்கூடாது என, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. எனினும், விபத்து நடந்துள்ளது.