sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உதவித்தொகை பெற்று தருவதாக வசூல் பொதுமக்கள் புகாரால் தப்பி ஓட்டம்

/

உதவித்தொகை பெற்று தருவதாக வசூல் பொதுமக்கள் புகாரால் தப்பி ஓட்டம்

உதவித்தொகை பெற்று தருவதாக வசூல் பொதுமக்கள் புகாரால் தப்பி ஓட்டம்

உதவித்தொகை பெற்று தருவதாக வசூல் பொதுமக்கள் புகாரால் தப்பி ஓட்டம்


ADDED : நவ 11, 2025 06:50 AM

Google News

ADDED : நவ 11, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: சேலம் அருகே, உதவித்தொகை பெற்று தருவதாக வசூலில் ஈடுபட்டு வந்த பெண் தப்பினார்.

சேலம் மாவட்டம், மல்லுார் டவுன் பஞ்சாயத்து, பிச்சம்பாளை-யத்தில் ஒரு வீட்டில் அலுவலகம் அமைத்து, முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு உதவித் தொகை பெற்று தருவ-தாக, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பேனர் (இந்திய குடிய-ரசு கட்சி- கவாய்) கட்டி வைத்து, பெண் ஒருவர் வசூல் வேட்-டையில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து அப்பகுதி மக்கள், மல்லுார் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனாரிடம் புகார் செய்தனர். இது பற்றி விசாரிக்க, துணைத்தலைவர் அய்யனார் நேற்று பிச்சம்பாளையம் சென்றார். வசூல் வேட்டையில் ஈடுபட்ட அந்த பெண், அங்கி-ருந்து மொபட்டில் தப்பினார். சம்பவ இடத்துக்கு வந்த மல்லுார் போலீசார், அங்கிருந்த ஆவணங்களை எடுத்து சென்றனர்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில்,' சேலத்தை சேர்ந்த அப்பெண், கடந்த ஒரு மாதமாக ஒரு வீட்டில் இருந்த-படி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு உதவித்-தொகை மற்றும் வங்கி கடன் பெற்று தருவதாக, ஒவ்வொருவரி-டமும், 500 முதல் 3,000 ரூபாய் வரை வசூல் செய்துள்ளார். ஒரு போட்டோ, ஆதார், ரேஷன் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றை வாங்கி உள்ளார்,'' என்றனர்.மல்லுார் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார் கூறு-கையில்,'' அனைத்து இடங்களிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது. அதில் மனு அளித்தால், தகுதியான பய-னாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்கும். இது போன்ற மோசடி கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us