/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பறிமுதல் செய்த கார் நம்பர் பிளேட் போலி
/
பறிமுதல் செய்த கார் நம்பர் பிளேட் போலி
ADDED : ஜூலை 31, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், வீராணம் போலீசார், கடந்த, 14ல் வலசையூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 'இன்னோவா' கார் வந்தது. ஆனால் போலீசாரை பார்த்ததும், காரை சாலையோரம் நிறுத்தி விட்டு, அதில் இருந்தவர்கள் தப்பி சென்றனர்.
இதை கவனித்த போலீசார் அந்த காரை சோதனை மேற்கொண்டதில் எந்த பொருட்களும் சிக்கவில்லை. இருப்பினும் காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்ததில், அதன் நம்பர் பிளேட் போலி என தெரியவந்துள்ளது. இதுகுறித்து, எஸ்.ஐ., நேற்று முன்தினம் அளித்த புகார்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.