ADDED : டிச 06, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில் நேற்று நடந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு அஞ்சலி கூட்டத்துக்கு, வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து வந்தார்.
அப்போது அவரிடம், நல்லியாம்புதுாரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பழனிசாமி, 60, கூறுகையில், ''தமிழக அரசு வழங்கும் உதவித்தொகையை வாங்கி பிழைப்பு நடத்துகிறேன். யாருமின்றி ஆதரவற்று உள்ளேன். வயது முதிர்வால் கையால், சைக்கிள் ஓட்ட முடியவில்லை. மாற்றுத்திறாளிகள் பயன்படுத்தும், 'ஸ்கூட்டர்' வழங்கினால் உதவியாக இருக்கும்,'' என்றார்.