/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி
/
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி
ADDED : செப் 08, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: தலைவாசல் அருகே சின்னபுனல்வாசலை சேர்ந்தவர் ரமேஷ், 37. விவசாயியான இவர், நேற்று மதியம், 3:00 மணிக்கு அருகே உள்ள தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு, கிணற்றோரம் நடந்து சென்றார். அப்போது, 80 அடி ஆழம், 20 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
மாலை, 3:50க்கு கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். 10 நிமிடத்தில் அங்கு சென்ற தீயணைப்பு
வீரர்கள், ஒரு மணி நேரத்துக்கு பின், கிணற்றினுள் மூச்சுத்திணறி இறந்து கிடந்த ரமேஷ் உடலை வலை மூலம் மீட்டனர்.கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.