/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் கடைகளை அடித்து நொறுக்கிய கும்பல்
/
ஏற்காட்டில் கடைகளை அடித்து நொறுக்கிய கும்பல்
ADDED : ஜூலை 15, 2024 01:25 AM
ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காடு டவுன் கடைவீதியில், அந்தோணி என்-பவர் 'மெஸ்' நடத்தினார்.
அதன் அருகே சிவராஜ் என்பவர் மளிகை கடை நடத்தினார். அதன் அருகே உள்ள நிலத்தை, வேறு ஒருவர் வாங்கியதாகவும், அதனால் அந்த நிலம், கடை தொடர்-பாக பிரச்னை இருந்து வந்தது. இதனால் அந்தோணி தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மெஸ், மளிகை கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுகுறித்து அந்தோணி ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகாரளித்தார். அதில் அவர் கூறியிருப்பதா-வது: நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, நான், என் தாய் உள்பட சிலர், கடைக்குள் இருந்தோம். அப்போது ஒரு கும்பல் கடப்பாரை, கத்தியுடன் வந்து மிரட்டல் விடுத்தனர். இதனால் வெளியே வந்துவிட்டோம். பின் கடைக்குள் புகுந்தவர்கள் பொருட்களை உடைத்து சூறையாடினர். கடை பராமரிப்புக்கு வைத்திருந்த, 50,000 ரூபாய், அன்றைய வியாபார தொகை, 8,000, கடை ஆவணங்களை எடுத்துக்கொண்டு மேற்கூரை சுவரை இடித்துச்சென்றனர். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

