ADDED : மே 22, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், வீராணம் அடுத்த அல்லிக்குட்டை, வெங்கடாசலம் காலனியை சேர்ந்தவர் கோமதி, 62. இவரது மகன் மனோகர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு 2 வயதில் கவுரவ் என்ற குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் கோமதி, கவுரவை வைத்திருந்தார். அப்போது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. இதனால் மனோகர் குழந்தையை எடுத்துச்சென்றார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் குழந்தையை தருமாறு கோமதி கேட்டபோது, மனோகர் மறுத்துவிட்டார். இந்த கோபத்தில் வீட்டிலிருந்து கோமதி வெளியேறிவிட்டார். எங்கு தேடியும் கிடைக்காததால், மனோகர் புகார்படி, வீராணம் போலீசார் தேடுகின்றனர்.