/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கார் டயர் வெடித்ததும் இறங்க முயன்றவர் பலி
/
கார் டயர் வெடித்ததும் இறங்க முயன்றவர் பலி
ADDED : ஆக 15, 2024 07:16 AM
பனமரத்துப்பட்டி: சேலம், அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் தனசேகர், 40.
இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். பள்ளப்பட்டியில் தனசேகர், லாரி உதிரி பாகம் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், 2:45 மணிக்கு, 'இண்டிகோ' காரில், உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் சென்றார். திரும்பி சேலம் புறப்பட்டார். இரவு, 8:00 மணிக்கு, நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலை, பனமரத்துப்பட்டி பிரிவு மேம்பாலத்தில் வந்தபோது காரின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய காரில் இருந்து தனசேகர் இறங்க முயன்றார். அப்போது சாலையில் தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சென்டர் மீடியன் மீது மோதிய கார், எதிர் சாலையில் சாய்ந்தது. மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.