ADDED : செப் 23, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், :சேலம், கருப்பூர் அருகில் வட்டக்காடு, தேக்கம்பட்டி முதல் தெருவை சேர்ந்தவர் பூபதி மகன் சுகுமார், 32, பெயின்டிங் வேலை செய்து வந்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன், ஆண்டிப்பட்டியை சேர்ந்த புவனா என்பவருடன் திருமணம் நடந்து, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார்.
பெற்றோர் வீட்டில் இருந்து வேலை செய்து வந்த சுகுமார், கடந்த 9ல், வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், கருப்பூர் போலீசில், அவரது தந்தை பூபதி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.