/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவிலில் திருடிய பூசாரி தாயுடன் கைது
/
கோவிலில் திருடிய பூசாரி தாயுடன் கைது
ADDED : ஆக 16, 2024 05:36 AM
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஜங்கமசமுத்திரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது.
இங்கு அதே பகுதியை சேர்ந்த வேலு, 28, பூசாரியாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் அம்மனுக்கு அணிவித்திருந்த முக்கால் பவுன் தாலி, உண்டியலை உடைத்து காணிக்கையும் திருடு போனது. கோவில் நிர்வாகிகள் புகார்படி தம்மம்பட்டி போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக பூசாரி வேலு, அவரது தாய் சரசு, 54, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சரசு, தாலியை நகைக்கடையில் கொடுத்து, கவரிங் தாலி பெற்றது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது வேலு, தாலி, உண்டியலில் இருந்த, 8,000 ரூபாயை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனால் இருவரையும் கைது செய்தோம்' என்றனர்.

