/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தவறுதலாக நிலம் பதிவு செய்ததாக சார்பதிவாளர் அலுவலகம் முற்றுகை
/
தவறுதலாக நிலம் பதிவு செய்ததாக சார்பதிவாளர் அலுவலகம் முற்றுகை
தவறுதலாக நிலம் பதிவு செய்ததாக சார்பதிவாளர் அலுவலகம் முற்றுகை
தவறுதலாக நிலம் பதிவு செய்ததாக சார்பதிவாளர் அலுவலகம் முற்றுகை
ADDED : அக் 14, 2025 02:17 AM
கெங்கவல்லி, தவறுதலாக நிலத்தை பதிவு செய்துள்ளதாக, கெங்கவல்லி சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
கெங்கவல்லியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 76. இவருக்கு, 1.55 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, 74.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணி மனைவி கீதா பெயரில், கடந்த, 10ல், கெங்க வல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில், நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணமூர்த்தியின் மகன்கள் குமரேசன், கணேஷ், சுரேஷ் மற்றும் உறவினர்கள் என, 30 பேர், நேற்று தங்களது தந்தை நிலத்தை, வாரிசு
தாரர்களுக்கு தெரியாமல் நிலம் பதிவு செய்துள்ளது என்றும், இவற்றை ரத்து செய்யக்கோரி, நேற்று காலை, 10:30 மணியளவில் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது, சார்பதிவாளர் (பொ) ராஜேந்திரன், 'ஆவணங்கள் அடிப்படையில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறாக பதிவு செய்யவில்லை' என்றார். தொடர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், கெங்கவல்லி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீசார், 'தவறான முறையில் நிலத்தை பதிவு செய்திருந்தால், அதுகுறித்து புகார் மனு அளித்தால் விசாரணை
செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். அதன்பின் மதியம், 2:00 மணியளவில் கலைந்து சென்றனர்.