/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சீல்' வைத்த கோவில் திடீர் திறப்புமீண்டும் மோதலால் பூட்டிய போலீஸ்
/
'சீல்' வைத்த கோவில் திடீர் திறப்புமீண்டும் மோதலால் பூட்டிய போலீஸ்
'சீல்' வைத்த கோவில் திடீர் திறப்புமீண்டும் மோதலால் பூட்டிய போலீஸ்
'சீல்' வைத்த கோவில் திடீர் திறப்புமீண்டும் மோதலால் பூட்டிய போலீஸ்
ADDED : டிச 21, 2024 01:22 AM
ஓமலுார், டிச. 21-
'சீல்' வைக்கப்பட்ட கோவில், திடீரென திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டதால், போலீசார் பூட்டுப்போட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டி கால்நடை மருத்துவமனை எதிரே, அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது. அக்கோவில் உள்ள இடம் அரசுக்கு சொந்தமான நிலம். அங்கு தமிழ் விஸ்வகர்மா, தெலுங்கு விஸ்வகர்மா தரப்பினர் வழிபட்டு வரும் நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவில் இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் பூஜை செய்ய முயன்றனர். இதனால் பிரச்னை ஏற்பட, ஓமலுார் வருவாய்த்துறையினர், தீப திருவிழா முதல் நாளே, கோவிலை பூட்டி சீல்
வைத்தனர்.இந்நிலையில் நேற்று மாலை, 6:30 மணிக்கு, செல்லப்பிள்ளைகுட்டை வி.ஏ.ஓ., ரவிச்சந்திரன், 'சீல்' வைக்கப்பட்ட கோவிலை திறந்து வைத்தார். இதை அறிந்த ஒரு தரப்பினர், கோவிலை சுத்தம் செய்து வழிபாட்டை தொடங்கினர். அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினர், சுவாமியை தரிசனம் செய்தபோது, இருதரப்பு பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தள்ளுமுள்ளுவாக மாறியது. இதில் இரு பெண்கள் காயம் அடைந்து, ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையறிந்த, ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார், கோவிலுக்கு சென்று பேச்சு நடத்தினார். மற்றொரு தரப்பினர் ஓமலுார் போலீஸ் ஸ்டேஷன் சென்று, அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதனால் கோவிலில் இருந்தவர்களை, போலீசார் வெளியேற்றினர். தொடர்ந்து கோவிலை பூட்டி, மேற்கொண்டு பிரச்னை ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய பாதுகாப்பின்றி, கோவில் திறக்கப்பட்டதால் மீண்டும் இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.