/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேகத்தடையில் ஏறியபோது பைக்கில் இருந்து விழுந்தவர் பலி
/
வேகத்தடையில் ஏறியபோது பைக்கில் இருந்து விழுந்தவர் பலி
வேகத்தடையில் ஏறியபோது பைக்கில் இருந்து விழுந்தவர் பலி
வேகத்தடையில் ஏறியபோது பைக்கில் இருந்து விழுந்தவர் பலி
ADDED : ஆக 21, 2024 06:28 AM
காடையாம்பட்டி: காடையாம்பட்டி தாலுகா சட்டூரை சேர்ந்த செல்வராஜ் மகன் விநாயகமூர்த்தி, 29. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் பணி முடிந்து, அவருடன் பணிபுரியும் ஹரிக்குமாருடன், 'யுனிகான்' பைக்கில் புறப்பட்டார். ஹரிக்குமார் ஓட்டினார். நள்ளிரவு, 12:40 மணிக்கு, தர்மபுரி - சேலம் பிரதான சாலை, பண்ணப்பட்டி சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்தபோது வேகத்தடையில் ஏறியபோது, விநாயகமூர்த்தி தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
அவரை மக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியில் விநாயக-மூர்த்தி இறந்துவிட்டார். காயம் அடைந்த ஹரிக்குமார், மருத்துவ-மனையில் உள்ளார். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு விபத்துநாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன், 31, பூபாலன், 24. இருவரும் நேற்று முன்தினம் பொலிரோ சரக்கு வேனில் ஓசூரில் இருந்து காய்கறி ஏற்றிக்-கொண்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். லோகேஸ்-வரன் ஓட்டினார். இரவு, 10:30 மணிக்கு சேலம் மாவட்டம் சீரகா-பாடி அருகே கொம்பாடிப்பட்டி பிரிவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணிக்கு கொட்டி வைத்துள்ள மண், கற்கள் மீது வேன் மோதியது. இதில் வேனின் முன்புறம் சேதம் அடைந்த-தோடு பூபாலன் உடல் நசுங்கி பலியானார். காயம் அடைந்த லோகேஸ்வரன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆட்-டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

