/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பந்தை எடுக்க முயன்றபோது ஓடையில் விழுந்தவர் பலி
/
பந்தை எடுக்க முயன்றபோது ஓடையில் விழுந்தவர் பலி
ADDED : மே 23, 2024 07:23 AM
ஆத்துார் : ஆத்துார் நகராட்சி பாரதியார் தெரு வழியே ஓடை செல்கிறது.
அந்த ஓடை குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம், 10 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. அந்த பாலம் வழியே ஆபத்தான நிலையில், இருசக்கர வாகனங்களில் மக்கள் செல்கின்றனர். நேற்று, 30வது வார்டை சேர்ந்த டிரைவர் முருகேசன் மகன் மதன், 18, அந்த பாலத்தில் கிடந்த பந்தை எடுக்க முயன்றார். அப்போது ஓடை நீரில் தவறி விழுந்த அவர் மூழ்கி இறந்துவிட்டார். ஆத்துார் டவுன் போலீசார், மதன் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'மதனுக்கு வலிப்பு வருவது வழக்கம். அவர் பாலத்தில் பந்தை எடுக்க முயன்றபோது வலிப்பு ஏற்பட்டு விழுந்து இறந்திருக்கலாம்' என்றனர்.

