/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தபால் அலுவலகத்தில் பொருட்கள் திருட்டு
/
தபால் அலுவலகத்தில் பொருட்கள் திருட்டு
ADDED : டிச 28, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், இரும்பாலை, 3வது கேட் அருகே எம்.ஜி.ஆர்., நகரில் தபால் நிலையம் உள்ளது. அங்கு, 3 பேர் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் பணி முடிந்து பூட்டிச்சென்றனர்.
நேற்று காலை வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 'பார்சல்' உள்பட, 1,500 ரூபாய் மதிப்பில் பொருட்கள் திருடுபோயிருந்தது தெரிந்தது. இரும்-பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.