/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
19ல் பிரதமர் பங்கேற்கும் கூட்டம் பால வேலையால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் ஆபத்து
/
19ல் பிரதமர் பங்கேற்கும் கூட்டம் பால வேலையால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் ஆபத்து
19ல் பிரதமர் பங்கேற்கும் கூட்டம் பால வேலையால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் ஆபத்து
19ல் பிரதமர் பங்கேற்கும் கூட்டம் பால வேலையால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் ஆபத்து
ADDED : மார் 16, 2024 07:19 AM
சேலம் : பால வேலையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வரும், 19ல் பிரதமர் பங்கேற்கும் கூட்டம் நடக்க உள்ளதால், அன்று நெரிசல் மேலும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.
சேலம் - திருச்சி பிரதான சாலை, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் நிலத்தில், பிரதமர் மோடி பங்கேற்கும், லோக்சபா தேர்தல் பிரசார கூட்டம், வரும், 19ல் நடக்க உள்ளது. அங்கு ஏற்கனவே, தே.மு.தி.க., அ.தி.மு.க., வி.சி., கட்சி கூட்டங்கள், மாநாடு நடந்தன. இதனால் அந்த இடத்தை, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் தேர்வு செய்து கட்சி தலைமை, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினார்.
அங்கிருந்து வந்த தகவல்படி, சேலம் மாவட்ட போலீஸ் துறை, கூட்டத்துக்கு அனுமதி வழங்கியது. குறிப்பாக பிரதமர், கூட்டம் நடக்கும் இடத்துக்கு ெஹலிகாப்டரில் வந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டதால் போலீசார் தயக்கமின்றி அனுமதி வழங்கினர்.
ஆனால் தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள், விழா நடக்கும் இடத்துக்கு வரும் பாதையில், தாசநாயக்கன்பட்டியில் தொடங்கி நிலவாரப்பட்டி வரை, 1.5 கி.மீ.,க்கு பால வேலை நடக்கிறது. இதனால் தற்போதே வாகனங்கள், போக்குவரத்து நெரிசலால் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடி சென்று வருகின்றன. கூட்டம் நடக்கும் நாளில், கூடுதலாக, 5,000 வாகனங்கள் வந்து செல்ல வாய்ப்புள்ளது.
அத்துடன் அன்று போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் விழா நடக்கும் இடத்துக்கு வரும் வாகனங்களை நிறுத்த, 10 இடங்களில் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த முடிவு செய்து அதற்கான பணி நடந்து வருகிறது. மேலும் போக்குவரத்தில் மாற்றம் செய்ய, போலீசார் முடிவு செய்துள்ளனர். இருப்பினும் பா.ஜ., மாநாட்டுக்கு அதிகளவில் வாகனங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கேற்ப முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படாதபடி தடுக்க, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

