/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'லேப் - டாப் நிறுத்தப்பட்டதால் கல்வி தரத்தில் பாதிப்பு இல்லை'
/
'லேப் - டாப் நிறுத்தப்பட்டதால் கல்வி தரத்தில் பாதிப்பு இல்லை'
'லேப் - டாப் நிறுத்தப்பட்டதால் கல்வி தரத்தில் பாதிப்பு இல்லை'
'லேப் - டாப் நிறுத்தப்பட்டதால் கல்வி தரத்தில் பாதிப்பு இல்லை'
ADDED : நவ 06, 2024 01:40 AM
'லேப் - டாப் நிறுத்தப்பட்டதால்
கல்வி தரத்தில் பாதிப்பு இல்லை'
இடைப்பாடி, நவ. 6-
''பள்ளிகளில் வழங்கப்பட்ட, லேப் - டாப் நிறுத்தப்பட்டதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது என, எதிர்க்கட்சி தலைவர், இ.பி.எஸ்., கூறுவது ஏற்புடையதல்ல,'' என, அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பயிற்சி பெற்று வந்த ஆசிரியர்களிடம் பேசினார். சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், தலைமை ஆசிரியை விஜயா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:
தலைமை ஆசிரியர் என்பவர் கப்பலின் கேப்டன் மாதிரி. ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் நல்ல தலைமை ஆசிரியர் அமைந்தால் அந்த பள்ளியின் கல்வித்தரம், விளையாட்டு மேம்பாடு ஆகியவை சிறப்பாக இருக்கும். பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, லேப் - டாப் நிறுத்தப்பட்டதால் மாணவர்களின்
கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது என, எதிர்க்கட்சி தலைவர், இ.பி.எஸ்., கூறுவது ஏற்புடையதல்ல.
அரசு பள்ளி, அதன் உதவி பெறும் பள்ளிகளில், 1.25 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம் என்பதை கூட, 'நான் முதல்வன், தமிழ் புதல்வன் திட்டம்' மூலமும், தலைமை ஆசிரியர்கள் மூலம் வழிகாட்டுதலும் கொடுக்கப்படுகிறது. எந்த மாநிலத்திலும் இல்லாதபடி, 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, 'ஸ்மார்ட் வகுப்புகள், ஏ.ஐ., தொழில்நுட்பம்' பாடம் கற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும், 'ஸ்மார்ட் லேப்' கட்டப்பட்டு வருகிறது.
போதைப்பொருட்கள் அதிகரித்து வருவது, சமுதாயத்தில் உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள் அடங்கிய கூட்டு பொறுப்பு. நீதிபோதனை மூலம், போதை பழக்கத்துக்கு ஆளாகி விடாமல் மாணவர்கள் இருக்க, ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இப்பள்ளியில் உள்ள ஆங்கில வழி கல்வி மாதிரி பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம், மாதம், 150 ரூபாய் பெற்றுக்கொள்வது குறித்து, அமைச்சர் விளக்கம் கேட்டார். பின் மாணவர்களிடம் எந்த தொகையும் வசூலிக்கக்கூடாது என உத்தரவிட்டார். இதையடுத்து கொங்கணாபுரம், ரங்கபாளையத்தில் உள்ள தொடக்கப்பள்ளி, ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு செய்தார்.