ADDED : மார் 25, 2026 06:40 AM
அ நிறம் | அளவு
ஏற்காடு தொகுதியில், 336 ஓட்டுச்சாவடிகளில், 21 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானதாக அடையாளம் காணப்பட்டு, கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பி.பெருமாபாளையம், வேப்பிலைப்பட்டி, விலாரிபாளையம், சோமம்பட்டி, புதுப்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், சிங்கிபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பதற்ற ஓட்டுச்சாவடிகளில் நேற்று, மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி, பொது பார்வையாளர் ஹர்பூங்சிங்யாதவ், கள ஆய்வு நடத்தி, பாதுகாப்பு ஏற்பாடு குறித்து
ஆலோசித்தனர். அப்போது, ஓட்டுப்பதிவு நாளில் வாக்காளர்களுக்கு எந்த இடையூறும் இன்றி ஓட்டளிக்க வசதியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாள, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
