அனல் மின் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
அனல் மின் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
ADDED : ஜன 21, 2026 10:59 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்: மேட்டூரில், 840 மெகாவாட், 600 மெகாவாட் அனல்மின் நிலை-யங்கள் உள்ளன. 80க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவன கட்டுப்-பாட்டில், 1,800க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரி-கின்றனர். அவர்களில், 600 ஊழியர்கள், 10 ஆண்டுக்கு மேல் பணிபுரின்றனர்.
இந்நிலையில் ஒப்பந்த ஊழியர்கள், அவர்களது குழந்தைகள் உள்-ளிட்ட குடும்பத்தினர், நேற்று மதியம், 2:00 மணி முதல், மேட்டூர் அனல்மின் நிலைய வளாக நுழைவாயில் முன் அமர்ந்து, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினர்.
அப்போது, 'தி.மு.க., அளித்த வாக்குறுதிப்படி அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் நீடிக்கும்' என, ஒப்பந்த ஊழி-யர்கள் தெரிவித்தனர். கருமலைக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவும் போராட்டம் நீடித்தது.
