/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவில் உண்டியலில் கை சிக்கியதால் பிடிபட்ட திருடன்
/
கோவில் உண்டியலில் கை சிக்கியதால் பிடிபட்ட திருடன்
ADDED : ஏப் 27, 2025 05:04 AM
அதியமான்கோட்டை,: நல்லம்பள்ளி அருகே, பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உண்-டியலை திருட முயன்றபோது, உண்டியலில் கை சிக்கியதால், விடிய விடிய கோவிலில் காத்துக்
கிடந்த திருடனை, போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, சேசம்பட்டியில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்-தினம் இரவு திருட வந்தவர், கோவில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருட, கையை உள்ளே நுழைத்துள்ளார்.அவரது கை உண்டியலில் சிக்கியதால் வெளியே எடுக்க முடிய-வில்லை. அந்த திருடன், விடிய விடிய கோவிவில் காத்து கிடந்தான். நேற்று காலை கிராம மக்கள் தகவலின்படி, அதிய-மான்கோட்டை போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணைல
நடத்தினர். இதில், உண்டியலில் திருட முயன்றவர் சேசம்பட்டி அருகே, சவுளூர் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ், 42, என தெரிந்-தது. தீயணைப்பு துறையினர் உண்டியலை கட்டிங் இயந்திரத்தில் துண்டித்து, திருடனின் கையை உண்டியலில் இருந்து வெளியே எடுத்தனர். பின் அவரை அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர். உண்டியலில், 500 ரூபாய் மட்டும் இருந்தது. கைதான தங்கராஜ் மீது, ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் உள்ளன.