/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வரும் 21ல் ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி - வினா
/
வரும் 21ல் ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி - வினா
வரும் 21ல் ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி - வினா
வரும் 21ல் ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி - வினா
ADDED : டிச 18, 2024 01:57 AM
சேலம், டிச. 18-
தமிழகத்தில் அனைத்து துறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், கல்லுாரி ஆசிரியர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., நிறுவன ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, மாநில அளவில் திருக்குறள் வினாடி - வினா போட்டி, விருதுநகர் மாவட்டத்தில், வரும், 28ல் நடக்க உள்ளது.
இதில் சேலம் மாவட்டம் சார்பில் பங்கேற்கும் அணிகளை தேர்வு செய்வதற்கான போட்டி, வரும், 21ல் கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நடக்க உள்ளது. அதில் ஒரு மணி நேர எழுத்துத்தேர்வு நடத்தி, அதில் முதல், 9 இடங்களை பிடித்த ஆசிரியர்கள், பணியாளர்கள் கொண்ட குழுவினர், மாநில போட்டிக்கு அனுப்பப்பட உள்ளனர். இத்தேர்வு போட்டிக்கு, மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.