/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜனநாயக சக்திகள் ஓரணியில் இணைய வேண்டும் சேலத்தில் திருமாவளவன் பேச்சு
/
ஜனநாயக சக்திகள் ஓரணியில் இணைய வேண்டும் சேலத்தில் திருமாவளவன் பேச்சு
ஜனநாயக சக்திகள் ஓரணியில் இணைய வேண்டும் சேலத்தில் திருமாவளவன் பேச்சு
ஜனநாயக சக்திகள் ஓரணியில் இணைய வேண்டும் சேலத்தில் திருமாவளவன் பேச்சு
ADDED : ஆக 16, 2025 02:30 AM
சேலம், இ.கம்யூ., கட்சியின், 26வது தமிழ் மாநில மாநாடு, சேலத்தில் நேற்று தொடங்கியது. மாநில செயலர் முத்தரசன் தலைமை வகித்தார்.
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
மத்திய அமைச்சர் அமித்ஷா, 2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக ஆட்சி மலரும். கூட்டணி ஆட்சி உருவாகும் என அடிக்கடி பேசி வருகிறார். அதை நாம், வியூகமாக கருதி கடந்து விட முடியாது.
பீகாரில் நடந்தது போல, தமிழகத்திலும் வாக்காளர்களை நீக்கும் வாய்ப்பு உண்டாகும். அதன்மூலம் காங்., இடதுசாரிகள், திராவிடம் இல்லாத தமிழகத்தை உருவாக்க முயல்கிறார்கள்.
தி.மு.க., வலுவான கூட்டணி என்றாலும், பா.ஜ., சங்பரிவார்களை உள்ளே நுழைய விடாமல் எதிர்க்க வேண்டும். ஜனநாயகத்தை தற்காத்துக்கொள்ள போராட வேண்டும். ஜனநாயகம் - சனாதனம் இடையே நடக்கும் யுத்தத்தில் ஜனநாயகம் வெற்றிபெற வேண்டும்.
இரு கம்யூ., கட்சிகள் மட்டுமல்ல; ஜனநாயக சக்திகள், ஓரணியில் இணைய வேண்டும். தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றிபெறுவோம் என்பதை விட, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்களை வீழ்த்த வேண்டும். அந்த பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அதற்காகவே, நிபந்தனை அற்ற உறவு, நட்பு வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
துாய்மை பணியாளர்கள் விவகாரத்தை ஆதாயமாக பயன்படுத்தி, தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக தவறான பிரசாரத்தை செய்து வருகின்றனர். எங்களை பொறுத்தவரை, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் வேலை செய்யும் துாய்மை பணியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்க வேண்டும். தற்போது அவர்களுக்கு, 6 புது திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ''திருமாவளவன் சொன்னதை போல, நம் கொள்கை கூட்டணி வெற்றி பெறும்,'' என்றார்.