/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்வாரிய குடியிருப்பில் வீட்டின் பூட்டை உடைத்த மூவருக்கு வலை
/
மின்வாரிய குடியிருப்பில் வீட்டின் பூட்டை உடைத்த மூவருக்கு வலை
மின்வாரிய குடியிருப்பில் வீட்டின் பூட்டை உடைத்த மூவருக்கு வலை
மின்வாரிய குடியிருப்பில் வீட்டின் பூட்டை உடைத்த மூவருக்கு வலை
ADDED : ஜன 21, 2025 06:07 AM
மேட்டூர்: மின்வாரிய குடியிருப்பில், வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற மூவர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மேட்டூர், தொட்டில்பட்டி அனல்மின் நிலைய குடியிருப்பில் வசிப்பவர் குப்புசாமி. இவர் பழைய அனல்மின் நிலையத்தில் பிட்டராக வேலை செய்கிறார். அவரது மனைவி விஜயா, 50. நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு விஜயாவின் வீட்டு கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. விஜயா எழுந்து கதவை திறந்-தபோது, வெளியே மூன்று மர்ம நபர்கள் நின்று கொண்டிருந்-தனர்.விஜயா கூச்சலிட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். பின்பு வெளியே வந்து
பார்த்தபோது, அருகில் உதவி பொறி-யாளர் சுதா வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. சுதா வேலைக்கு சென்ற நிலையில், வீட்டு கதவு
உடைக்கப்பட்டும் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. விஜயா நேற்று கொடுத்த புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்கள் மூவரையும் தேடி வருகின்றனர்.