நிலத்தை அபகரிக்க திட்டம் மூவர் தீக்குளிக்க முயற்சி
நிலத்தை அபகரிக்க திட்டம் மூவர் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூன் 09, 2026 03:11 AM
சேலம்; சேலம், காடையாம்பட்டி அடுத்த எலத்துார் கிரா-மத்தை சேர்ந்த விவசாய தொழிலாளி மாணிக்கம், 53. இவர், தனது மனைவி மற்றும் சகோதரியுடன் மனு அளிக்க நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது, மண்ணெண்-ணையை தன் மீதும், உடன் வந்த இருவர் மீதும் ஊற்றிவிட்டு, தீக்குளிக்க முயன்றார். போலீசார், மூவரையும் தடுத்து மீட்டு முதலுதவி அளித்-தனர்.
அதன்பின் போலீசாரிடம், மாணிக்கம் கூறியதா-வது:எலத்துாரில் எங்கள் மூதாதையருக்கு சொந்த-மான, 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. போலி ஆவணம் மூலம் அந்த நிலத்துக்கு சின்னமாரி பெயரில் பட்டா பெற்று விற்பனை நடந்துள்ளது. இது தொடர்பான வழக்கு ஓமலுார் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த 6ல், தீவட்டிப்பட்-டியை சேர்ந்த வி.சி., பிரமுகர் தலைமையில், 20 பேர், அத்துமீறி நுழைந்து நிலத்தை அளவீடு செய்ய முயன்றனர். அதை தட்டிக்கேட்ட என் குடும்பத்தாரை தாக்க முற்பட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
நிலத்தை அளக்க வந்த சர்வேயர், வி.ஏ.ஓ., அவ-ரது உதவியாளர் ஆகியோர் இதற்கு உடந்தை. இது தொடர்பாக போனில் புகார் தெரிவித்தபோது, தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமி, எங்களை கைது செய்து விடுவதாக எச்சரித்தார். எனவே, நான் போலீஸ் உதவி எண், 100க்கு தகவல் தெரி-வித்த பின், அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர். முறைகேடாக நிலத்தை அளவீடு செய்ய வந்த வி.சி., பிரமுகர், அவருக்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை அபகரிப்பு செய்வதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
அவர்களிடம் டவுன் போலீசார் விசாரித்து, மேல் நடவடிக்கை எடுக்க தீவட்டிப்பட்டி ஸ்டேஷ-னுக்கு அனுப்பி வைத்தனர்.
