/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிக்கெட் பரிசோதகர் உதவி பொறியாளருக்கு 'மெமோ' வழங்கல்
/
டிக்கெட் பரிசோதகர் உதவி பொறியாளருக்கு 'மெமோ' வழங்கல்
டிக்கெட் பரிசோதகர் உதவி பொறியாளருக்கு 'மெமோ' வழங்கல்
டிக்கெட் பரிசோதகர் உதவி பொறியாளருக்கு 'மெமோ' வழங்கல்
ADDED : ஜூலை 19, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டுக்கு, கடந்த, 14ல் தடம் எண்: 34 டவுன் பஸ் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணியரிடம், 'டி-சர்ட்' அணிந்தபடி, தொழில் பழகுனர் அலாவுதீன், 21, டிக்கெட் பரிசோதனை செய்தார். சீருடை அணியாத நிலையில் பரிசோதனை குறித்து, வீடியோ பரவியது.
இதனால் ஆத்துார் கிளை மேலாளர் வெங்கடேசன் விசாரித்து, சேலம் கோட்ட பொது மேலாளர் மோகன்குமாருக்கு அறிக்கை வழங்கினார். இதனால் உரிய விளக்கம் கேட்டு, உதவி பொறியாளர் பத்மநாபன், பயணியர் சீட் பரிசோதகர் செல்வத்துக்கு, நேற்று முன்தினம், 'மெமோ' வழங்கப்பட்டுள்ளது.