/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.3 லட்சம ்மதிப்புள்ள புகையிலை, கார் பறிமுதல்; பதுக்கிய மூவர் கைது
/
ரூ.3 லட்சம ்மதிப்புள்ள புகையிலை, கார் பறிமுதல்; பதுக்கிய மூவர் கைது
ரூ.3 லட்சம ்மதிப்புள்ள புகையிலை, கார் பறிமுதல்; பதுக்கிய மூவர் கைது
ரூ.3 லட்சம ்மதிப்புள்ள புகையிலை, கார் பறிமுதல்; பதுக்கிய மூவர் கைது
ADDED : டிச 10, 2024 07:44 AM
தாரமங்கலம்: தாரமங்கலம், வேடப்பட்டி சாலையில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பதாக, தாரமங்கலம் போலீசுக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற எஸ்.ஐ., மாதையன் தலைமையிலான போலீசார், தாரமங்கலத்தை சேர்ந்த சிவசங்கர், 42, என்பவரின் கல்யாண பாத்திர கடையில், சோதனை செய்தனர்.
அதில் பாத்திர கடையில் இருந்த, 32 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்-களை கைப்பற்றி, அவரை
ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரித்-தனர். இதில், நங்கவள்ளி சாலையில் உள்ள சேலம் ஸ்டோர் கடையை
நடத்தும், ஜெய்ப்பூரை சேர்ந்த மனோகர் சிங், 22, இவரின் நண்பர் ஓமலுார் ஊமை மாரியம்மன் கோவில்
பகுதியை சேர்ந்த வடிவேலன், 46, என்பவர்களிடம் வாங்கியதை சிவசங்கர் ஒப்புக்கொண்டார். அதன்படி, சேலம் ஸ்டோர் கடையில் போலீசார் சோதனை செய்த-போது, ஓமலுார் சாலையில், போட்டோ
ஸ்டுடியோ அருகில் உள்ள குடோனில், புகையிலை பொருட்கள் உள்ளதை ஒப்புக்-கொண்டார். போலீசார்
குடோன் மற்றும் அங்கிருந்த ஸ்விப்ட் காரில் சோதனை செய்ததில், 196.600 கிலோ புகையிலை பொருட்-களை
கைப்பற்றி, ஸ்டேஷனுக்கு எடுத்து வந்தனர். மூன்று லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள், காரை
பறிமுதல் செய்த போலீசார், சிவசங்கர், மனோகர்சிங், வடிவேலன் ஆகியோரை கைது செய்தனர்.