ADDED : மே 03, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், திருவெம்பாவை பெருவிழா கழகம் சார்பில், 63 நாயன்மார் திருவீதி உலாவை முன்னிட்டு, நேற்று சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை தாயாருக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து பட்டாடை உடுத்திஅர்ச்சனை நடந்தது. தொடர்ந்து பண்ணிசை திருத்தொண்டர் கோவை சவஸ்ரீ தண்டபாணி ஓதுவார் குழு சார்பில், சிவன் பாடல் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
இன்று காலை, வலம்புரி விநாயகர், சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை தாயாருக்கு அபிேஷகம், திருமுறை செல்வன் தங்கமணி ஓதுவார் குழுவினரின் சிறப்பு திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 9:30 மணிக்கு, 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடக்கிறது. மதியம் சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை, அன்னம் பாலிப்பு நிகழ்ச்சி, மாலையில், 63 நாயன்மார் திருவீதி உலா நடக்கிறது.