/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று சித்திரை விஷூ கனி காணுதல் நிகழ்வு
/
இன்று சித்திரை விஷூ கனி காணுதல் நிகழ்வு
ADDED : ஏப் 14, 2024 07:49 AM
சேலம் : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, வீடுகளில் சித்திரை விஷூ கனி காணுதல் நிகழ்வு இன்று நடக்கிறது. இதற்கு தாம்பாளத்தில் வாழைப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பழங்களை அலங்கரித்து மையப்பகுதியில் புது ரூபாய் நோட்டுகளை வைத்து அதன் மேல் நகைகளை வைப்பர். புத்தாண்டு பிறக்கும் முதல் நாள் இரவே, பூஜை அறையில் ஒரு கண்ணாடியை வைத்து
அதன் முன் இந்த பழத்தட்டை வைப்பர். விடிந்ததும், குழந்தைகளின் கண்களை மூடிக்கொண்டு பூஜை அறைக்கு அழைத்துச்செல்லும் பெற்றோர், அந்த பழத்தட்டிலும் கண்ணாடியிலும் விழிக்கச்செய்கின்றனர். இதுபோன்ற மங்கல பொருட்களை பார்த்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. பின் குளித்து முடித்து புத்தாடை உடுத்தி சுவாமி கும்பிட்ட பின், பெரியவர்கள், தட்டில் வைத்த ரூபாய் நோட்டுகளை எடுத்து, வீட்டில் உள்ள குழந்தைகள், மற்றவர்களுக்கு கொடுப்பர்.
இதை, கைநீட்டம் என்கின்றனர். ஆண்டுதோறும் பணம் குறையாமல் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. கேரள மக்களின் வழக்கமாக இருந்த இந்நிகழ்ச்சி, இன்று அனைவர் வீடுகளில் அனுசரிக்க தொடங்கியுள்ளனர்.

