/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாரியம்மன் கோவிலில் இன்று பொங்கல் வைபவம்
/
மாரியம்மன் கோவிலில் இன்று பொங்கல் வைபவம்
ADDED : நவ 07, 2024 01:08 AM
மாரியம்மன் கோவிலில் இன்று பொங்கல் வைபவம்
வீரபாண்டி, நவ. 7-
சேலம், சூளைமேடு பெரிய மாரியம்மன் கோவிலில் ஐப்பசி பொங்கல் திருவிழா, கடந்த அக்., 24ல் கம்பம் நடுதல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு பட்டத்து அரசி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்து பொங்கல் விழாவுக்கு கொடியேற்றி, பூவோடு எடுத்து ஊர்வலம் நடந்தது.
இன்று காலை, 10:00 மணிக்கு படைவெட்டி அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் அம்மன் ஊர்வலம் நடக்கிறது. நாளை காலை மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாலை மாவிளக்கு, அக்னி கரகம், பூங்கரகம், பொய்க்கால் குதிரை நடனத்துடன் ஊர்வலம், இரவு, சத்தாபரண ஊர்வலத்தில் அம்மன் குதிரை வாகனத்தில் ஊர்வலம் நடக்க உள்ளது.
வரும், 9 அதிகாலை, 5:00 மணிக்கு கம்பம் எடுக்கப்பட்டு, ஊர்வலமாக சென்று திருமணிமுத்தாற்றில் விடப்படும். 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் திருவிழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சோழமாதேவி, அறங்காவலர் தலைவர் முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.