ADDED : செப் 19, 2026 03:43 AM
சேலம்:லட்சிய ஜனநாயக கட்சி பொதுக்கூட்டம், சேலம், சீலநாயக்கன்பட்டி - எருமாபாளையம் பைபாஸ் பகுதியில், நாளை நடக்க உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் சேலம் ஒருங்கி-ணைந்த மாவட்ட செயலர் வேணுகோபால் அளித்த பேட்டி: சேலத்தில் லட்சிய ஜனநாயக கட்சி கூட்டம் செப்., 20(நாளை) மாலை, 5:00 மணிக்கு நடக்க உள்ளது. இக்கட்சி தொடங்கிய பின், சேலம் மாவட்டத்தில் நடக்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள், மக்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடு நடக்கிறது. இதில் கட்சியின் அடுத்த கட்ட அமைப்பு, செயல்பாட்டு நடவடிக்கைகள், மாவட்ட, தொகுதி அளவில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தல், புது உறுப்-பினர்களை இணைத்தல், மக்கள் தொடர்பு பணி-களை விரிவுபடுத்தல் உள்ளிட்டவை குறித்து கட்சி நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேச உள்ளார். மாநில பொதுச்செயலர் ஜீவாவும் பேச உள்ளார். இவ்வாறு அவர் தெரி-வித்தார்.தொடர்ந்து கூட்ட மேடை பணியை, அவர் உள்-ளிட்ட நிர்வாகி கள் பார்வையிட்டனர். மாநில துணை பொதுச்செயலர் ஜெயகாந்தன், சேலம் மண்டல செயலர் கோபி
உடனிருந்தனர்.
